சில வருடங்களுக்கு முன்பு, மதுரையிலுள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு பயின்று கொண்டிருந்தேன். தினமும் கல்லூரிக்கு வீட்டிலிருந்து சென்று வருவது வழக்கம். அன்று விடுமுறை தினம் என்பதால் , நானும் தம்பியும் வீட்டிலிருந்தோம். பெற்றோர் காய்கறி வாங்க அருகிலுள்ள உழவர் சந்தைக்குச் சென்றிருந்தனர்.
காலையில் மெதுவாக எழுந்து, பல் துலக்கி, கையில் சூடான காபியுடன் தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தம்பி யோகா செய்து முடித்து விட்டு, தரையில் உயிரற்ற நிலையில் இருந்தான்(ஒரு வித ஆசன நிலை).
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது."ஜோசியம்!கிளி ஜோசியம்!","ஜோசியம்!கிளி ஜோசியம்!" என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வசிக்கும் தெருவிலுள்ளவர்கள், ஓரளவு வசதி படைத்தவர்கள். எனவே, அவர்கள் யாவரும் தெருவில் விற்க வரும் யாரையும் சட்டை செய்வதில்லை. சில, பல நேரங்களில் "நானும்" கூட.
அன்று எனக்கு "இன்று கிளி ஜோசியம் பார்த்து விட வேண்டும்!" என்ற அவா பீறிட்டுக் கொண்டு எழுந்தது. என் விருப்பத்தை தம்பியிடம் தெரிவித்தேன். அவன் சம்மதம் தெரிவித்த பின்பு, நான் ஜோசியரை வீட்டிற்குள் அழைத்து , வரவேற்பறையின் கீழே அமர வைத்து , நாங்களும் அருகில் அமர்ந்தோம்.
அவர் கொண்டு வந்திருந்த துணியை கீழே பரப்பி, அதில் ராசி சீட்டுக்கட்டுகளை அடுக்கினர். பின்பு, கூண்டுக்கிளியை வெளியே திறந்து, "அம்மாடி! இந்த மகாராசிக்கு ஒரு ராசியான சீட்ட எடுத்துக் கொடும்மா!" என்றார்.
கிளியும் கூண்டைத் திறந்த மகிழ்ச்சியில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தவாறு, வெளியில் வந்து அடுக்கி வைத்திருந்த சீட்டுக் கட்டிலிருந்து எனக்கான ஒரு ராசி(?) சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ,பின் கூண்டிற்குள் சென்று விட்டது.
கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் ஒரு நாகப் படம் வந்தது. அதிலிருந்து அவர் "அம்மா!" உனக்கு சர்ப்ப தோசம் உள்ளது. எதோ ஒரு கர்ப்பிணிக்கு கழிச்சிப் போட்டத, தெரியாம நீ மிதிச்சுட்ட!" எனவே அதற்கு உடனடியா நீ பரிகாரம் பண்ணனும்!" என்றார். (நான் வசிப்பது நகரம். அவர் சொல்வது மாதிரி யாரும் சுத்திப் போட்டதை நான் பார்த்தது கிடையாது).
எனக்கு ஓரளவு வருத்தமாக இருந்தது என்பதை என் முகம் பிரதிபலித்தது போலும்! என் முகக் குறிப்பை அறிந்து கொண்ட ஜோசியர் , உன்னோட மன திருப்திக்கு வேண்டுமானால், இன்னுமொரு முறை சீட்டை எடுத்துப் பார்க்கலாம் என்று கூறி , மறுபடியும் கிளியை அழைத்து ஒரு சீட்டை எடுக்கச் சொன்னார்.
கிளி மறுபடியும் அதே சீட்டை எடுத்தது.( கிளி சீட்டை எடுத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு குறிப்பிட்ட சீட்டை எடுத்ததும் ஜோசியர் விரலால் கிளியின் அருகில் ஒரு சப்தத்தை ஏற்படுத்தினார். உடனே கிளி சீட்டு எடுப்பதை நிறுத்தி விட்டு , வாயிலிருந்த சீட்டை அவரிடம் கொடுத்தது.).
அந்த சீட்டைப் பார்த்ததும் ஜோசியர் "கண்டிப்பாக பரிகாரம் செய்தே ஆக வேண்டும்!" இல்லை என்றால் உனக்கு திருமணம் தடைப் படும். சகல வித தீமைகளும் வந்து சேரும் என்றார். உடனே என் தம்பி "என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?" என்று அவரிடம் கேட்டான். அதற்கு அவர் " என்னிடம் ஒரு மந்திரித்த தகடு இருக்கிறது. அதை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்தால், எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்று கூறி, அந்த தகட்டைக் காட்டினார். நாங்களும் பயந்தவாறு , அந்தத் தகட்டைக் கேட்டோம். அதற்கு அவர் அதன் விலை முன்னூறு ருபாய் என்றும் , இது தன்னைத் தவிர சில அரிய இடங்களில் மட்டுமே கிகைக்கும் என்றார். என் தம்பியும் என் மீது அக்கறை கொண்டவனாதலால், வீடு முழுவதும் சென்று பணத்தைத் தேடினான். கூடவே சேர்ந்து நானும் தேடினேன். பெரு முயற்சிக்குப் பிறகு ஒரு ஒட்டுப் போட்ட நூறு ருபாய் கையில் சிக்கியது.
உடனே என் தம்பி அவரிடம், "அண்ணே ! எங்கட்ட அவ்ளோ பணம் இப்ப இல்ல. அப்பா அம்மா வெளில போயிருக்காங்க , ஒரு ஒட்டு போட்ட நூறு ரூவா தான் இருக்கு !!கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க வந்த உடனே வந்து வாங்கிக்குங்க !" என்றான். அதற்கு அவர், பரவாஇல்லை தம்பி! அந்த நூறு ரூபாயை மட்டும் குடுங்க . மிச்சத்தை வேறொரு நாள் வந்து வாங்கிக்கறேன்! என்றான்.
அவன் நெளிந்த நெளிவில் இருந்து எனக்கு சந்தேகம் தோன்றியது. உடனே என் அப்பாவிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைக் கூறினேன். அவர் மறு முனையில் பலவாறு என்னைக் கடிந்தவாறு, "அவன் திருட்டுப் பையன் .உடனே அவனை வீட்டை விட்டு விரட்டு !". என்றார்.
பின்பு, ஜோசியரை "ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீட்டை விட்டு அகற்றினோம்.!""
உடனே என் தம்பி அவரிடம், "அண்ணே ! எங்கட்ட அவ்ளோ பணம் இப்ப இல்ல. அப்பா அம்மா வெளில போயிருக்காங்க , ஒரு ஒட்டு போட்ட நூறு ரூவா தான் இருக்கு !!கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க வந்த உடனே வந்து வாங்கிக்குங்க !" என்றான். அதற்கு அவர், பரவாஇல்லை தம்பி! அந்த நூறு ரூபாயை மட்டும் குடுங்க . மிச்சத்தை வேறொரு நாள் வந்து வாங்கிக்கறேன்! என்றான்.
அவன் நெளிந்த நெளிவில் இருந்து எனக்கு சந்தேகம் தோன்றியது. உடனே என் அப்பாவிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைக் கூறினேன். அவர் மறு முனையில் பலவாறு என்னைக் கடிந்தவாறு, "அவன் திருட்டுப் பையன் .உடனே அவனை வீட்டை விட்டு விரட்டு !". என்றார்.
பின்பு, ஜோசியரை "ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீட்டை விட்டு அகற்றினோம்.!""
அருமை.
ReplyDeleteநல்ல வேளை ரூ100உடன் முடிந்தது. இன்றேல் 500 ரூ காலியாகியிருக்கும்.
வேடிக்கை பார்க்கலாம். கூப்பிட்டு ஜோசியம் கேட்கக்கூடாது.
வாழ்த்துகள்.
Please remove Word Verification.