சற்று முன், என் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சகல குசல விசாரிப்புகளுக்குப் பின் "என்ன? ஏதேனும் நல்ல செய்தி உண்டா? என்று கேட்டேன். நேற்று அவளைப் பாண்டிசேரியிலிருந்து பெண் பார்க்க, மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோரும் வந்திருந்தார்களாம் (காரைக்குடியிலுள்ள அவளின் வீட்டிற்கு ).
மாப்பிள்ளை சென்னையிலுள்ள ஒரு கட்டுமானக் கம்பெனியில் உதவி மேலாளராகப் பணியாற்றுகிறாராம். பெண்பார்க்கும் படலம் முடிந்து, மணமகன் வீட்டார் பெண்ணை எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றார்களாம். இவள், தன் தந்தையிடம் "அப்பா நான் மாப்பிள்ளையிடம் "சற்று தனியாகப் பேச வேண்டும்!" என்றாளாம்.
இதனை, மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவிக்கவே, " மாப்பிள்ளையும் , தோழியும் அருகிலுள்ள ஒரு தனியறைக்குச் சென்று பேசினார்களாம். அப்பொழுது , மணமகன் தோழியிடம் , "அந்தக் காலத்துல எல்லாம் பசங்க தான், பொண்ணக் கூப்பிட்டுப் பேசுவாங்க.!! ஆனா " இப்ப ட்ரெண்டே மாறிப் போச்சு!! பொண்ணுங்க தான் முதல்ல பசங்களக் கூப்பிட்டுப் பேசுறாங்க !!" என்று சொன்னாராம்.
அவள் இதmனைக் கூறியவுடன்.. "நீயா இப்படி?" என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டதற்கு, என்ன செய்வது ? அவர் எங்கு வேலை செய்கிறார் ? மற்றும் பிற விவரங்களைக் கேட்பதற்கு தான் கூப்பிட்டேன் என்று சொன்னாள். மணமகனும், " இது ஒன்னும் தப்பு இல்ல ? இப்பிடித்தான் போல்ட் ஆ இருக்கணும்"! என்று சொன்னாராம்.
ஒரு வழியாக , ஏதோ நல்லது நடந்தா சரி என்று கூறிவிட்டு போனை வைத்தேன்.
அவளுடன்கல்லூரியில் படித்த பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே , "காலம் மாறிப் போச்சுன்னு சொல்லுவாங்களே அது இது
தானோ?" என்று நினைத்துக் கொண்டேன்.!!
( ஏனென்றால் எனக்கு அந்த அளவு தைரியம் இல்லை!! ஹி ஹி ஹி )
No comments:
Post a Comment